சிரிய ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கிடையே யுத்த நிறுத்த உடன்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த யுத்த நிறுத்த உடன்பாடு அமலுக்கு வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் ரஸ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் அலேப்போ நகரை மீட்டுள்ள நிலையில் சிரிய ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுடன் யுத்தநிறுத்தம் குறித்து ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனை இரண்டு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளனர் என ரஸ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். அத்துடன் இரண்டு தரப்புகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் சிரியா முழுவதும் போர் நிறுத்தம் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.