Home இலங்கைபோலிக் கடவுச்சீட்டுக்களுடன் இரண்டு இலங்கையர்கள் கைது

போலிக் கடவுச்சீட்டுக்களுடன் இரண்டு இலங்கையர்கள் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

போலிக் கடவுச்சீட்டுக்களுடன் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவின் கொல்கொத்தாவின் நேதாஜீ சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில்  வைத்து  கைது செய்யப்பட்டுள்ளனர். சுரேஸ் மற்றும் ஜெபநேசன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இருவரும் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியா சென்றுள்ளதாகவும் போலியாக ஆவணங்களை தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்னதாக சீனா ஊடாக இருவரும் பிரான்ஸ் செல்ல முற்பட்ட வேளை  சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளால் கடவுச்சீட்டு பரிசோதனை செய்ய்யப்பட்டு கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More