குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் சீன ஆதரவு கொள்கைகள் குறித்து ஏன் இந்தியா மௌனம் காக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். சிறிசேன – ரணில் அரசாங்கம் சீனாவிற்கு ஆதரவான கொள்கைகளை நோக்கி நகர்வதாகவும் அதனை இந்தியா ஏன் கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீன அணுவாயு நீர்மூழ்கி கப்பல் ஒன்று தமது ஆட்சிக் காலத்தில் இலங்கை வந்திருந்த போது கேள்வி எழுப்பிய இந்தியா, சீனாவிற்கு இலங்கை ஆதரவளித்து வருகின்றமை குறித்து ஏன் தற்பொழுது கேள்வி எழுப்புவதில்லை என அ வர் குறிப்பிட்டுள்ளார்.
தமது ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்காவிற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் முக்கியமான பங்கு உண்டு எனவும், இந்தியா அதற்கு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.