குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட கருத்து தவறானது அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தை முற்றுமுழுதாக தாம் நிராகரிப்பதாகவும், அதனை எதிர்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் இவ்வாறான கருத்துக்கள் தேவையற்றதும் பொருத்தமற்றதும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நோக்கத்திற்காக இவ்வாறான கருத்து ஒன்றை வெளியிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவரே இன்று நாட்டின் பிரதமராக கடமையாற்றியிருப்பார் என விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கு அமைச்சர் சுவாமிநாதன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
1 comment
‘பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவரே இன்று நாட்டின் பிரதமராக கடமையாற்றியிருப்பார்’, என விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்தை முற்று முழுதாக்கத் தான் நிராகரிப்பதாகக் கூறும் திரு. சிவாமிகத்தான், அதற்கான காரணமாக, ‘அரசியல் நோக்கத்திற்காக இவ்வாறான கருத்து முன்வைக்கப்பட்டது’, என்றும் கூறுகின்றார்! ஒருவர் எந்த அமைப்பைச் சார்ந்தவராக இருந்தாலும், அவருக்கெனச் சொந்தக் கருத்தொன்று இருப்பது, இயல்புதானே?
பாராளுமன்றில் இருக்கும் 235 அங்கத்தவர்கள் மத்தியில் கூறப்பட்ட இக் கூற்றை 150 க்கும் மேற்பட்ட பெரும்பான்மையின அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாதபோது, இவர்மட்டும் துள்ளுவது, ‘அரசியல் நோக்கத்துக்காகவன்றி வேறு எதற்காக’? கடந்த ஆட்சிக் காலத்தில், வெளிநாட்டு ஊடகங்களில் இவர் திரு. பிரபாகரனைப் போற்றித் துதிபாடியதை மக்கள் இன்னும் மறக்கவில்லை?
ஓ, இவர் திரு. ரணில் விக்கிரமசிங்கவின் பினாமியோ? இக் கூற்றுக்கான விளக்கத்தைத் தரும்படி திரு. விமல் வீரவங்ச பிரதாமரைக் கேட்டமைக்காகப் பதிலை இவர் வழங்குகின்றாரோ?
‘கல் வீடு கட்டமாட்டேன், Slaps வீடுதான் காட்டுவேன்’, என்ற இவரது அடம்பிடிப்பின் இரகசியம் வெளிவரும் நாள் வெகு தோலைவில் இல்லை?