இந்தியாவின் வடக்கு மாநலமான அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமாகாண்டு பதவி நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக பெமாகாண்டுடன் துணை முதலமைச்சர் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
60 தொகுதிகளைக் கொண்ட அருணாச்சல மாநிலத்துக்கு மக்கள் கட்சியை சேர்ந்த பெமாகாண்டு முதலமைச்சராக உள்ளார். உச்சநீதிமன்ற தலையீடு காரணமாக பெமாகாண்டு கடந்த ஜூலை 17ம் திகதி முதலமைச்சா பொறுப்பேற்றிருந்தார். புதிய முதலமைச்சராக டக்கம்பாரியோ தேர்ந்தெடுக்கப்படுவார் என மக்கள் கட்சியின் தலைவர் கபியா பென்ஜியா தெரிவித்துள்ளார்.
பெமாகாண்டு இந்தியாவின் இளம் வயது முதலமைச்சர் எனப் பெருமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.