யாழ் சதுரங்க முற்றத்தினால் நடாத்தப்பட்டுவரும் Jaffna junior chess championship சதுரங்கப் போட்டிகள் கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகள் 08 வயது, 10வயது, 12வயது, 14வயது, 16வயது, 18வயது என ஆறு வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் என 12 பிரிவுகளாக நடைபெற்றுவருகின்றன.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் 26ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை ஒவ்வொரு வயதுப்பிரிவுகளுக்கும் தனித்தனியாக chess Quiz & Simultaneous எனபன நடைபெற்றன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன் , பங்குபற்றிய அனைவருக்கும் பங்குபற்றுனருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நேற்றும் இன்றும்(29ம், 30ம் திகதிகள்) நியம வேக (Standard) சதுரங்கப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 150 இற்கும் மேற்பட்ட வீர, வீராங்கணைகள் கலந்துகொண்டுவருகின்றனர்.
நாளை (31ம் திகதி) மிதவேக(Rapid) சதுரங்கப் போட்டிகளும், நாளை மறுதினம் (01ம் திகதி) காலை மின்னல்வேக (Blitz) சதுரங்கப் போட்டிகளும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும், வெற்றிச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதுடன் பங்குபற்றிய அனைவருக்கும் பங்குபற்றுனருக்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் மூன்றுவகைப் போட்டிகளிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெறுபவருக்கு (அனைத்துப் பிரிவுகளிலும்) இந்த ஆண்டிற்கான சிறந்த வீரர் என்ற விசேட வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படவுள்ளது.
பரிசில் வழங்கல் நிகழ்வு 01ம் திகதி பி.ப. 3.30- 5.30 வரை நடைபெறவுள்ளது என யாழ் சதுரங்க முற்றத்தினர் அறிவித்துள்ளனர்.