139
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனவாத கட்சியல்ல என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் கட்சியின் முக்கிய பதவிகளை தமிழ் மற்றும் முஸ்லிம்கள் பெற்றுக்கொண்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர் அமைப்புக்களை உருவாக்கும் போது சிறுபான்மை சமூகத்தை உள்ளடக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை முன்நோக்கி நகர்த்துவதற்கு இளைஞர் தலைவர்களை உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Spread the love