146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முப்படையினருக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்புக் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. சட்டவிரோதமான முறையில் படையினர் படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்கள் கைது செய்யப்படுவர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ள நிலையில் நாளை முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.
51,000 படையினர் இதுவரையில் படைகளிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் இதில் 42,500 பேர் இராணுவப் படையினர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட ரீதியாக படையிலிருந்து விலகிக் கொள்ளும் படையினருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love