குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சில ஊடகங்கள் அரசாங்கத்தை மலினப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரனவிதாரன குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தத்தி;ன் பின்னரான தேசிய நல்லிணக்க முனைப்புக்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் முனைப்புக்களை சில ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் மலினப்படுத்தி வருவதாகவும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சில ஊடகங்களின் செய்தி அறிக்கையிடல் இதனை பறைசாற்றி நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு திரும்பிச் செல்வதனை குழப்பும் வகையில் சில ஊடகங்கள் செய்தி அறிக்கையிட்டதாகவும் நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் சென்ற தரப்பினருடன் இணைந்து கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் இவ்வாறு ஒழுக்க விதிகளுக்கு புறம்பான வகையில் செய்தி அறிக்கையிட்டு வருவதாகவும் கருணாரட்ன பரனவிதாரன குறிப்பிட்டுள்ளார்.