148
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு மர்ம அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய குரல், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தான்.
இதையடுத்து, உஷாரடைந்த பொலீசார் அந்த அழைப்பை விடுத்த நபரை தீவிரமாக தேடி கண்டுபிடித்தனர். பிடிபட்ட 14 வயது சிறுவனான புவனேஸ்வரன் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் அவனிடம் விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.
Spread the love