குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.கே வாசன், அந்நாட்டு மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 73 இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய மீனவர்களுடன் 101 படகுகளும் இலங்கை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பாக நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அதிகளவில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் ஜீ.கே வாசன் தெரிவித்துள்ளார்.