இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு, இரு நாடுகளின் மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற, துணைத் தூதருக்கான வரவேற்பு விழாவில்,கருத்து வெளியிட்ட ஏ.நடராஜன்,
இந்தியாவைப் பற்றிய வெளிநாடுகளின் பார்வை, தற்போது மாறியுள்ளது. இந்தியர்களின் கணினி தொழில்நுட்ப அறிவை, உலகம் முழுவதும் உள்ளவர்கள் வியந்து போற்றுகின்றனர். மாணவர்கள் எளிமை, பரந்த மனப்பான்மை, உதவி செய்யும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இயற்கையை, தூய்மையைப் பாதுகாக்க வேண்டும். பிற மொழிக் கலப்பு இல்லாமல் தமிழைப் பேச வேண்டும்.
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இலங்கைக் கடற்படையால் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளிலேயே அடைப்பார்கள். அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டாலும், அவர்களது துன்பங்களைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.
எனவே, இரு நாடுகளின் மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, மனிதாபிமான அடிப்படையில் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது:-
136
Spread the love
previous post