முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்குநிலைகொண்டிருக்கின்ற கடற்படையினரின் தேவை கருதிசுவீகரிப்பதற்காக புதன்கிழமை 3 ஆம் திகதி நில அளவைசெய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த அறிவித்தலை அரச நில அளவையாளர் பா.நவஜீவன்எழுத்து மூலமாக பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.
மூன்றாம் திகதி காலை
ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நிலஅளவை 5 ஆம் திகதி வரை தொடர்ந்து காலை முதல் மாலைவரை மேற்கொள்ளப்படும் என்றும் அந்தப் பகுதியில் உள்ளகாணி உரிமையாளர்கள் யாராவது இருப்பின் அவர்கள் உரியஆவணங்களுடன் நில அளவை செய்யப்படும்போது அங்குசமூகமளிக்குமாறும் அந்த அறிவித்தலில்கோரப்பட்டிருக்கின்றது.
இந்த அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவையாளர் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காகஒட்டப்பட்டிருக்கின்றது.