157
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்!
மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் புதன்கிழமை (27) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது. ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு வினால் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. இரு மாவீரர்களின் தந்தை ஒருவர் பொதுச் சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
கொடிகாமம் துயிலும் இல்லத்தில்
மாவீரர் தின நிகழ்வு யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் மாலை இடம் பெற்றது. பொதுச்சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தை கந்தசாமி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய தீபங்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
சாட்டி துயிலும் இல்லத்தில்
யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களால் சுடர்களை ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர். அதனைதொடர்ந்து நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது
கோப்பாய் துயிலுமில்லத்தில்
கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக உள்ள தனியார் காணியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. கொட்டும் மழைக்கு மத்தியில் மாலை 06.05 மணிக்கு இரண்டு மாவீரர்களின் தாய் பொது சுடரேற்ற, மாவீரர்களின் உறவுகளும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்
Spread the love