170
போராட்டம் நடத்தியவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வோருக்கு மக்கள் ஆணையளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டம் நடத்தும் தரப்பினர் இரண்டு தேசிய ரீதியான தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது இந்த போராட்டம் நடத்துவோருக்கு இந்த விடயம் மீளவும் புரிய வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Spread the love