பாத யாத்திரையில் சிறுவனை பயன்படுத்தியது சட்டவிரோதமானது என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சிறுவன் ஒருவரை தோளில் சுமந்து சென்றதாகவும், சிறுவன் கொடியொன்றை ஏந்திச் சென்றதாகவும் தெரிவி;;த்துள்ளார்.
இது தொடர்பிலான வீடியோ காட்சியும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் தலைமையகத்தை கடக்கும் போது கூட்டு எதிர்க்கட்சியினர் கூக்குரல் எழுப்பி அவமரியாதை செய்தமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்கு எதிராக கூக்குரல் இட்டவர்கள் கட்சியின் மெய்யான உறுப்பினர்களாக இருக்க வாய்ப்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
பாத யாத்திரையில் சிறுவனை பயன்படுத்தியது சட்டவிரோதமானது – குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-
169
Spread the love