150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கையில் நேபாளப் பிரஜைகள் சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையிலான நேபாளப் பிரஜைகள் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த 19 நேபாளப் பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர். பெரும் எண்ணிக்கையிலான நேபாளப் பெண்கள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love