குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
வெளிநாட்டு விஜயங்கள் பற்றிய முக்கிய ஆவணங்களை காணவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் காணப்பட்ட பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஆவணங்களே காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக, 2006ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் 142 பிரதிநிதிகள் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்ட போதிலும், இது பற்றிய பகுதியளவு விபரங்களே காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன அறிக்கைகள் ஆவணங்கள் பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.