காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் நியாயம் வழங்க வேண்மென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் அமுல்படுத்தப்பட்டமைக்காக அரசாங்கத்திற்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில தரப்பினர் இந்த சட்டத்தை எதிர்க்கின்றார்கள் எனவும், தமிழ் இளைஞர்களைப் போன்றே சிங்கள இளைஞர்களும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிலர் சிங்கள இளைஞர்கள் பற்றி மட்டுமே பேசுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஆயிரக் கணக்கான நபர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையக் கண்டறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment