குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
புலனாய்வுப் பிரிவினர் தம்மை பின் தொடர்வதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்
புலனாய்வுப் பிரிவினர் தமது நடமாட்டங்களை கண்காணித்து வருவதாகவும் தம்முடன் பயணிப்போர் பற்றிய விபரங்கள் ஹோட்டல்களின் ஊடாகவும் திரட்டப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது நடமாட்டத்தை கண்காணிப்பதற்கான நியாயமான காரணங்கள் எதனையும் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தாம் எந்தவொரு வகையிலும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தம்மை பின்தொடர்வதனை விடவும் மிக முக்கியமான வேறு பணிகள் புலனாய்வுப் பிரிவிற்கு உண்டு என தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது நடமாட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மறைப்பதற்கு எதுவுமில்லை எனவும் தேவை ஏற்பட்டால் தாமே அது பற்றி விளக்கம் அளிக்கப்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.