குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க சமஸ்டி ஆட்சி முறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென விக்னேஸ்வரன் கோரி வருகின்றார் எனவும் இந்தக் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதனை அறிந்து கொள்ள விரும்புவதாகவும் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்திருந்தது.
இதற்கு பதிலளித்த பிரதமர், எந்தவொரு நபரும் அரசியல் சாசனம் பற்றி பேச முடியும் எனவும் அதற்கான உரிமையுண்டு எனவும் எனினும், அரசியல் சாசனம் அமைக்கும் பொறுப்பு பாராளுமன்றினையே சாரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து கட்சி குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அரசியல் சாசனத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் பாராளுமன்றின் அனைத்து உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.