191
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
தமது தந்தை கொலை செய்யப்பட்ட போது துமிந்த சில்வாவிற்கு முக்கிய பிரபுக்களின் ஆதரவு காணப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் நினைவு நாள் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொலைக்கு முறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கியவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த வேண்டுமெனவும் துமிந்த சில்வாவிற்கு மருத்துவ சிகிச்சை அளித்த வைத்தியர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
Spread the love