குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 73 பேருடன் அமெரிக்கா விஜயம் செய்திருந்தார் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றிருந்த போது 73 பேரை அழைத்துச் சென்றிருந்தார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் சொற்ப காலங்களில் மீண்டும் மஹிந்த ராஜபக்சவின் பொற்காலம் உருவாகும் என தெரிவித்துள்ள அவர் தேர்தல் வைத்தால் தோல்வியைத் தழுவ நேரிடும் என்ற காரணத்தினால் மைத்திரியும் ரணிலும் போட்டி போட்டுக் கொண்டு உலகம் சுற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவர் போகும் போது அவர் வருவதாகவும் அவர் வரும் போது இவர் போவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியின் வீட்டு நாய் மட்டுமே அண்மையில் அமெரிக்கா செல்லவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.