இந்தியா

தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை உடனடியாக நியமிக்க வேண்டும்:-

மு.க.ஸ்டாலின் கோரிக்கை:

தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை உடனடியாக நியமிக்க வேண்டும்:-

தமிழகத்திற்கு உடனடியாக பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  அவர் எப்போது மருத்துவ மனையிலிருந்து திரும்புவார் என  தெரியாத நிலையில் தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படும் நிலையில்  மு.க.ஸ்டாலின் மீண்டும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை  மு.க. ஸ்டாலின் நேற்று மாலை  தமிழக முதலமைச்சர்  சிகிச்சைபெற்றுவரும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நலம் குறித்து அமைச்சர்களிடம் விசாரித்துள்ளார்.

முதலில் ஓரிரு நாட்கள் மட்டுமே முதலமைச்சர் மருத்துவமனையில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என கூறப்பட்டிருப்பதால், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சார்பில் முதலமைச்சரது நலன் குறித்து விசாரிக்கவும் அவர் குணம்பெற்று பணிகளைத் தொடர வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும் மருத்துவமைனக்கு சென்றதாக மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply