162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான பங்குகளை போலி அட்டர்னி பத்திரம் ஒன்றின் மூலம் விற்பனை செய்ததாக, உதய கம்மன்பில மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐந்து லட்ச ரூபா ரொக்கப் பிணை மற்றும் இருபது லட்சம் ரூபா பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என் ரணவக்கவினால் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. உதய கம்மன்பில வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Spread the love