132
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பொருளாதார வலயம் தொடர்பில் சீனாவுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் 15000 ஏக்கர் பரப்பில் விசேட பொருளாதார வலயம் உருவாக்கப்பட உள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை உயர்த்தும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரச வருமானம் எதிர்வரும் ஆண்டுகளில் சுமார் 16 முதல் 17 வீதம் வரையில் உயர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இந்த பொருளாதார வலயம் அமைக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love