குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் உதிரவேங்கை ஆலய காணி தனியாருக்கு வழங்கும் முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு நிலஅளவையும் கைவிடப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு கிளிநொச்சி தொண்டமான்நகர் உதிரவேங்கை வைரவர் ஆலய காணியை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு தொழிற்சாலை அமைப்பதற்காக வழங்கப்பட்டதனையடுத்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.
இதனை தொடர்ந்து ஆலய நிர்வாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில் காணி மீண்டும் ஆலயத்திற்கு கிடைத்தது . இந்த நிலையில் தற்போது குறித்த காணியில் அரை ஏக்கர் தனக்குச் சொந்தமானது என்றுக் கூறிக்கொண்டு பெண் ஒருவர் இன்று செவ்வாய்க் கிழமை 11-10-2016 நில அளவை செய்ய சென்ற போது மீண்டும் விளையாட்டுக் கழகம் மற்றும் பொது மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
குறித்த காணி உதிரவேங்கை வைரவர் ஆலயத்திற்குச் செந்தமான காணி பல ஆண்டுகளாக ஆலயமும், ஞானவைரவர் விளையாட்டுக் கழகமும் பயன்டுத்தி வந்த நிலையில் வெளிநாட்டில இருந்து தற்போது வந்து தங்களுடையது என்று உரிமை கோருவது நியாயமற்றது அதற்கு நாம் அனுமதியளிக்க முடியாது என்று பொது மக்கள் தெரிவித்த நிலையில் காணிக்கு உரிமை கோரும் பெண் தான் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் சம்மதத்துடன்தான் வந்ததாகவும், பாராளுமன்ற உறுப்பினர்தான் இந்தக் காணியில் ஒரு ஏக்கர் காணி ஆலயத்திற்கு எனவும் மிகுதி அரை ஏக்கரை தனக்கு வழங்குவதாகவும் இது தொடர்பில் கிராம தலைவர்களுடன் தான் பேசுவதாகவும் தெரிவித்தார் எனவும் இன்று இங்கு வருவதாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒரு மரணவீடு காரணமாக வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத பொது மக்கள் இந்தக் காணியை 2013 இல் தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்;ப்புத் தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் எங்களுடன் சில மணித்தியாலயங்கள் அடையாள உண்ணாவிரத்திலும் ஈடுப்பட்டவர் எனவே இதனை ஏற்றுக்கொள்ள முடியாது நில அளவை செய்வதற்கும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டனர்
ஆனாலும் குறித்த பெண் தான் மீண்டும் உரிய தரப்பினர்களுடன் வந்து காணியை எடுத்துக்கொள்வேன் என்றுக் கூறிவிட்டு சென்று விட்ட நிலைiயில் நில அளவையும் கைவிடப்பட்டது. குறித்த காணி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் ஏ9 வீதியோடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.