குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபர் மற்றும் புலனாய்வு பிரிவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க எதிர்வரும் 27ம் நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்று உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவொன்றுக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீட்டின் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தாஜூடினின் உடல் பாகங்களை தொலைத்து விட்டதாகக் குற்றம் சுமத்தி தம்மை கைது செய்ய உள்ளதாகவும் இதனை தடுக்குமாறும் கோரி ஆனந்த சமரசேகர நீதிமன்றில் முன்பிணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த கோரிக்கையை நீதவான் நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில் இந்த தீர்ப்பிற்கு எதிராக ஆனந்த சமரசேகர மேன்முறையீடு செய்துள்ளார்.