180
தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளிற்கு காணி உரிமங்களை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி சிறிசேன ஆற்றிய கடுந்தொனியுடனான உரை மூலம் அவர் நல்லாட்சி அரசாங்கத்தின் அடிப்படைகொள்கைகளிற்குள் மூக்கை நுழைத்துள்ளார். மேலும் தேசிய அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் காணப்படுவதையும் அவரின் இந்த உரை வெளிப்படுத்தியுள்ளது.
முப்படைகளின் உயர் அதிகாரிகளிறகு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.விடுதலைப்புலி களிற்கு எதிராக போரிட்ட தளபதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறிப்பிட்டுள்ள அவர் தான் அதனை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.இதன் மூலம் எந்த காரணத்திற்காகவும் படையினரை விசாரிக்க கூடாது,தண்டிக்ககூடாது என தான் நினைப்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த உரை கொழும்புவிடுதியில் தனது மகனின் வன்முறை குறித்த விசாரணைகளில் ஜனாதிபதி தலையிட்ட சம்பவத்திற்கு பின்னர் வெளியாகியுள்ளது. இவ்வாறு தலையீடு செய்ததன் மூலம் அவர் நல்லாட்சி அரசாங்கம் குறித்த கொள்கைகள் பற்றிய தனது போதமையை வெளிப்படுத்தியிருந்தார்.
அதேவேளை அவரது கடுந்தொனி பேச்சு தேசிய அரசாங்கத்தில் உள்ள இரு பிரதானகட்சிகள் மத்தியில் காணப்படும் பதட்டம் நிறைந்த உறவுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இராணுவஅதிகாரிகளிற்கு எதிரான சதிகள் பலவட்டாரங்களில் அரசியல் உள்நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன,செவ்வா ய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சிஜடி, நிதிக்குற்றவியல் விசாரணை பிரிவு போன்றவை அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டால் நானும் சில முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும் என தெரிவித்துவிட்டேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.முன்னரும் நான் இந்த விடயங்கள் குறித்து பேசியுள்ளேன்,தற்போது நான் மீண்டும் இது குறித்து பேசநிர்பந்திக்கப்பட்டுள்ளேன், தேவைப்பட்டால் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்- இது தேசிய அரசாங்கத்தில் உள்ள ஐக்கியதேசிய கட்சிக்கான தெளிவான எச்சரிக்கையாகும்.
இந்த உரை ஜனாதிபதியின் மகனின் நள்ளிரவு விடுதிவன்முறைகள் குறித்த தகவல்கள் வெளியான பின்னர் நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவம் இடம்பெற்ற அன்றை தினமே அது குறித்த இரகசிய அறிக்கையொன்றை அதிகாரிகள் பிரதமரிடம் வழங்கியுள்ளனர். தனது மகனை பாதுகாப்பதற்கு பிரதமர் நடவடிக்கையெதனையும் எடுக்காதது குறித்து ஜனாதிபதி அதிர்ச்சியடைந்துள்ளார் என அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது இது முதற்தடவையல்ல, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச , தனது மகன் தகம் சிறிசேனவின் நடவடிக்கைகள் சிலவற்றை மிகைப்படுத்தி ஊடகங்களிற்கு தெரிவித்துவிட்டார் என கருதியதாலேயே சிறிசேன அவரை வெறுக்க தொடங்கினார்.
தற்போது தகம் மீண்டும் சிறிசேனவிற்கும் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் மோதலை உருவாக்குகின்றார், இதற்கு தீர்வு காணப்படாவிட்டால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அது முடிவுகட்டலாம்.
Spread the love