310
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்து வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரில் இந்த மகஜரில் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டிருந்தனர்.
மகஜர் கையொப்பமிட்டதன் பின்னர் இது ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த சந்தர்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டவர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
Spread the love