189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன வழக்கு விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த விசாரணைகளுக்கு இராணுவம் எவ்வித ஒத்துழைப்பினையும் வழங்கவில்லை என தெரிவித்த பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சரத் ஜயமான சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இந்த அழைப்புக்களுக்கு எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love