118
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெல்ஜியத்திற்கான மூன்று நாள் விஜயமொன்றை நாளை ஆரம்பிக்க உள்ளார். பிரதமருடன் உயர்மட்ட ராஜதந்திரிகள் சிலரும் பெல்ஜியம் நோக்கில் பயணிக்கின்றனர்.
வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தப்பட உள்ளதுடன் பெல்ஜியம் பிரதமர் சார்ள்ஸ் மிசேல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
Spread the love