குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலத்தீவு கொமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளது. மாலத்தீவுக்கு எதிராக காமன்வெல்த் அமைப்பு பாரபட்சமாக செயல்படுகிறது எனவும் நாட்டின் உள் விவகாரங்களில் அந்த அமைப்பு தலையிடுகிறது எனவும் எனவே தமது நாட்டின் சுதந்திரம், இறையாண்மையைப் பாதுகாக்க காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து மாலத்தீவு வெளியேறி உள்ளதென மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் முகமது ஆசிம் தெரிவித்துள்ளார்.
எனினும் இதனை ஒரு தற்காலிக பிரிவாகவே கருதுகிறோம் எனவும் மீண்டும் கொமன்வெல்த் குடும்பத்தில் மாலத்தீவு இணையும் எனவும் கொமன்வெல்த்தின் பொதுச்செயலாளர் பேட்ரிகா ஸ்கொட்லாண்ட் தெரிவித்துள்ளார். மாலத்தீவில் தற்போது இடம்பெற்றுவரும் ஜனாதிபதி அப்துல்லா யாமின் அப்துல் கயூம் தலைமையில் ஆட்சியில் அங்கு ஜனநாயகம் நசுக்கப்பட்டு வருவதாக சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவு கொமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்றம்
170
Spread the love
previous post