124
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
யாழ். – இளவாலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 130.68 கிலோகிராம் நிறையுடைய 35 கஞ்சா பொதிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து மாதகல் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட இருவரும் கஞ்சாவை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனவும் கைப்பற்றப்பட்ட கஞ்சா இளவாலைப் காவல்துறையினரிம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love