குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் வெளியேற்றும் கரியமிலம் உள்ளிட்ட நச்சு வாயுக்களை கட்டுப்படுத்த ருவான்டாவின் தலைநகர் கிகாலியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் 200நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. பூமி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த வருடம் பாரிஸில் நடைபெற்ற கூட்டத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது. அதிகளவில் நச்சு வாயுக்களை வெளியிடும் நாடுகள் ஒப்பந்தத்தில் பங்கேற்க ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்தச் சட்டத்தை அமுலுக்கு கொண்டு வரக் கூடும் என்ற நிலையில் நேற்று இரவு முழுவதும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கரியமிலவாயு எனப்படும் கார்பன் டை ஒக்சைட்டானது பசுமை வாயுக்கள் என்று அறியப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களை போன்று ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வளர்ச்சியடைந்த நாடுகளில் கரியமில வாயுவின் பயன்பாடு மூன்று ஆண்டுகளில் நிறுத்தப்படும் எனவும் வளர்ச்சி குறைந்த நாடுகளில், பல ஆண்டுகளின் பின்னரேயே ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.