சிரியாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த டபிக் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து சிரியா போராளிகள் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களும் மாற்று மதத்தினருக்குமான பண்டைக்கால யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள டபிக் நகரையும் அதற்கு அருகாமையில் உள்ள சோரான் என்ற கிராமத்தையும் துருக்கி நாட்டு படைகளின் துணையுடன் இன்று சிரியா போராளிகள் கைப்பற்றியுள்ளதாகவும் சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இறுதி நாள் மோதல் காட்சியை விவரிக்கும் இஸ்ரேலிய பாரம்பரிய பெயர்களில் ஒன்றாக டபிக் இருப்பதால், டபிக் சிறப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. துருக்கியோடு சிரியாவின் எல்லைப்பகுதி ஓரமாக அமைந்திருக்கும் நகரங்கள் மற்றும் கிராமங்களின் தொடர்களில் இது ஒன்றாகும். இதனை கைப்பற்ற கடந்த ஓகஸ்ட் மதத்திலிருந்து துருக்கி ஆதரவு சிரியா போராளிகள் பெரியதொரு தாக்குதலை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது