பிரித்தானியாவில் போர் பயிற்சி பெறுவதற்காக வந்த லிபிய ராணுவ பயிற்சி படையினர் நடத்திய பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு பல இலட்சக்கணக்கான டொலர் இழப்பீட்டை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் செலுத்தியுள்ளது. கேர்ணல் கடாபியின் வீழ்ச்சிக்கு பின்னர் லிபியாவை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக உருவாக்கப்பட்ட பயிற்சி திட்டத்தின் பகுதியாக 2014 ஆம் ஆண்டு முந்நூறுக்கும் மேலான லிபிய ராணுவ பயிற்சி படையினர் இங்கிலாந்தின் தென் பகுதிக்கு வந்திருந்தனர்.
எனினும் அவர்களால் நடத்தப்பட்ட தொடர் பாலியல் தாக்குதல்கள் காரணமாக பல மில்லியன் டொலர் செலவில் நடத்தப்படவிருந்த இந்த பயிற்சி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.