112
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கைக்கு உதவத் தயார் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்று வரும் காலமாற்ற செயன்முறை பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ரஸ்ய ஜனாதிபதி புட்டின், இந்தியாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ள வேளையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ரஸ்யாவின் நிபந்தனையற்ற ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Spread the love