133
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்கவின் ராஜினாமாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலகம் இந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தில்ருக்ஸியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு இந்தியாவிலிருந்து ஜனாதிபதி ஜனாதிபதி செயலகத்திற்கு பணித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழு தொடர்பில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்ததனைத் தொடர்ந்து இன்றைய தினம் தில்ருக்ஸி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Spread the love