குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையில் எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் இருக்கின்றார்கள் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அவற்றின் நிலைமை குறித்து அரசியல் சாசன சபையின் தலைவர் கரு ஜயசூரியவிடம் தெளிவுபடுத்துமாறு கோரியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சுயாதீன ஆணைக்குழுக்கள் குறித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பட்ட கருத்துக்கள் கிடையாது எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை உச்ச அளவில் உறுதி செய்து மக்களுக்கு சேவையாற்றுமாறு அவர், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் அதன் அங்கத்தினர்களிடம் கோரியுள்ளார்.