குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை இடைநிறுத்தவோ தலையீடு செய்யவோ ஜனாதிபதி விரும்பவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் நோக்கங்களில் செயற்பட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என மட்டுமே ஜனாதிபதி கூறியிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை பாதுகாப்பதற்காக உயிர் மற்றும் பல்வேறு தியாகங்களை செய்த படைவீரர்களை பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி உரையாற்றியிருந்தார் எனவும் ஜனாதிபதியின் கருத்தினை சில அரசியல் கட்சிகள் திரிபுபடுத்தி பிரச்சாரம் செய்து வருவதாகவும் சில ஊடக நிறுவனங்களும் தகவல்களை பிழையான வகையில் செய்தி அறிக்கையிட்டிருந்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.