இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ , பக்கத்து அறைகளுக்கும் பரவியதால் அங்கிருந்த நோயாளிகள் தப்பி ஓடுவதற்குள் தீ வேகமாகப் பரவியதாகவும் இந்த தீயில் சிக்கி 22 நோயாளிகள் உயிரிழந்துள்ளதுடன் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடியதுடன் தீயில் சிக்கியிருந்த நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சிகளையும் மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.