குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
புதிய அரசியல் சாசனம் உருவாக்கி அமுல்படுத்தப்படும் வரையில் தமிழர்கள் நாடு திரும்ப மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் அமுல்படுத்தப்படும் வரையில் புலம்பெயர் தமிழர்கள் காத்திருப்பதாகவும் விவசாயம், மீன்பிடித்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றன தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதன் மூலம் பிராந்திய வலயத்தின் முக்கிய நாடாக இலங்கையை மாற்றியமைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எட்கா உடன்படிக்கையின் ஊடாக உள்ளுராட்சி முயற்சியான்மையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.