காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக இன்றும் புகையிரத மறியல் போராட்ட் நடத்தப்படுகின்றது.
இந்த போராட்டத்துக்கு அ.தி.மு.க , பா.ஜனதா கட்சிகளை தவிர்த்து அனைத்து கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நேற்றையதினம் தமிழ்நாடு முழுவதும் 200 இடங்களில் புகையிரத மறியல் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இன்றையதினம் காலையில் வைகோ தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று எழும்பூர் புகையிரத நிலையத்தின் பிரதான வாசலை அடைந்து அங்கு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.அங்கு காவல்துறையினர் மேற்கொண்ட தடையையும் மீறி அவர்கள் புகையிரத நிலையத்துக்குள் புகுந்தனர். வாரணாசியில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் புகையிரதத்தை மறித்த வைகோவும், திருமாவளவனும் அந்த அதன் ; என்ஜின் மீது ஏறி நின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை வோல்டாக்ஸ் வீதியில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர் மைசூருக்கு செல்லும் வெஸ்ட்கோஸ்ட் புகையிரதத்தை மறித்து மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதனைத் தொடர்ந்து சீமான் உள்பட 100 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்;.