குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
காவல்துறை மா அதிபர் பதவி விலக வேண்டுமென ஜே.என்.பி கட்சி கோரியுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு ஆகியனவற்றில் அரசியல் தலையீடுகள் ஏற்படுவதற்கு காவல்துறை மா அதிபரே பொறுப்பு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தின் மூலம் இந்த நிறுவனங்கள் அரசியல் நோக்கில் செயற்பட்டு வருகின்றமை அம்லபமாகியுள்ளதாக கட்சியின் பேச்சாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினை பல்வேறு தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தினால் தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் பயனில்லை என தெரிவித்துள்ள அவர் இந்த நிறுவனங்கள் சுயாதீனமான முறையில் செயற்படவில்லை எனவும் எனவே காவல்துறை மா அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.