குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்கவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி நீதிமன்றில் விடுத்த கோரிக்கை ஒன்று தொடர்பிலேயே, தில்ருக்ஸி நீதிமன்றில் ஆஜராகுமாறு பணி;க்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு நிசாங்க சேனாதிபதி நீதிமன்றில் கோரியிருந்தார். நிசாங்க சேனாதிபதியின் கடவுச்சீட்டு இரண்டு வழக்குகள் தொடர்பில் முடக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தில்ருக்ஸி ஏற்கனவே தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.