குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சிதைப்பதற்கு அரசாங்கத்தின் சிலர் பகல் இரவாக செயற்பட்டு வருவதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார். படையினரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முயற்சித்த தரப்பினரே இந்த முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாகவும் சுதந்திரக் கட்சியின் ஐக்கியத்தைப் பேணிப் பாதுகாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அயராது உழைத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டவர்களை கைது செய்ய அரசாங்கத்தின் சிலர் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசீ ஒரு சதம் கூட திருடியதில்லை எனவும் அவரையும் விசாரணைக்கு உட்படுத்த சில தரப்பினர் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளினால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ள அவர் சர்வதேச ரீதியில் நன்மதிப்பினை மேம்படுத்தவும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் ஜனாதிபதி முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.