108
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தாய்லாந்து கால்பந்தாட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் Worawi Makudi க்கு ஐந்தாண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதே கால்பந்தாட்டப் பேரவையினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Worawi Makudi சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. Worawi Makudi க்கு இந்த ஐந்தாண்டு கால தடைக்கு மேலதிகமாக 8200 பவுண்ட்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையில் இடம்பெற்ற மோசடிகளில் Worawi Makudi தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love