குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆகியனவற்றின் நடவடிக்கைகள் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து உண்மையானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக கவனிக்கப்படும் எனவும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளைப் போன்றே நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகளும் முழுக்க முழுக்க அரசியல் நோக்கிலானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனங்கள் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதாக கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட தரப்பினர் குற்றம் சுமத்தி வருவதாகவும் இது பற்றி நாம் குறிப்பிட்டு வந்த போதிலும் திடீரென உறக்கத்தில் விழிந்து எழுந்தது போன்று ஜனாதிபதி ஆற்றிய உரைய எதற்காக என்பது புரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணப்பாளர்நாயகம் பதவி விலகியதன் மூலம் இந்தப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடிவதாகத் தெரிவித்துள்ளார்.