144
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு; இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு வருகின்றார் குறிப்பிடத்தக்கது.
Spread the love